ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனிய கைதிகளுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக ஐநாவின் புதிய அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது. மேலும், உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறை வழக்குகளையும் அந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.
உலக அளவில் போர் நடக்கும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐநா வெளியிட்டுள்ள 35 பக்க விரிவான அறிக்கையில் சர்வதேச அளவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 77 அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ஆம் ஆண்டில் இத்தகைய வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்தில் காசா மற்றும் west bank பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளுக்கு எதிராக முறையற்ற பாலியல் வன்முறை நடந்துள்ளதாக ஐநா அறிக்கை உறுதிபடத் தெரிவிக்கிறது.
இதில் காசாவைச் சேர்ந்த 14 ஆண்கள், 7 பெண்கள், 9 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி உள்ளிட்டவர்களை இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஐநா ஆவணப்படுத்தியுள்ளது.

Russian Troops
இஸ்ரேலிய சிறைச்சாலைகள் மற்றும் சிறப்புப் போலீஸ் பிரிவுகளில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கட்டாய நிர்வாணப்படுத்துதல் மற்றும் பிறப்புறுப்புகளைத் தாக்குதல் போன்ற கொடூரங்கள் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், ஹமாஸ் அமைப்பின் மீதான பாலியல் புகார்களைத் தொடர்ந்து பட்டியலிடும் ஐநா, இஸ்ரேல் தங்களுக்கு உரிய கள ஆய்வு அனுமதி வழங்க மறுத்ததால் ஹமாஸ் மீதான பல விபரங்களை சரிபார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி ரஷ்யாவும் இக்கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 310 பாலியல் வன்முறை வழக்குகளை ஐநா உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, உக்ரைன் தரப்பில் பதிவான 31 வழக்குகளில் பெரும்பாலானவை 2025க்கு முன் நடந்தவை என்பதால் உக்ரைன் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

Russia troops
ஐநா-வின் இந்த அறிக்கையில் உண்மையில்லை என்று பெரும் கண்டத்தை பதிவு செய்துள்ளது ரஷ்யா. ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ் போன்ற கொடூர பயங்கரவாத அமைப்புகளின் வரிசையில் இஸ்ரேலையும் நிறுத்தியுள்ளது ஐநா, அதனால் இனி ஐநா உடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
