நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என்மீது நம்பிக்கைவைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை.
அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள படம் `ப்ளாஸ்ட்’. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உட்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ப்ரீத்தி முகுந்தன், “என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வுசெய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால்தான் கதையைச் சொல்லும்போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இதுபோன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனைக் காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்துகொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
