பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதைவிட, ஐபிஎல் போன்ற தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடச் சொல்லி அதிக தொகை பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த ரகசியத் திட்டம் வெளியில் தெரிந்த நிலையில், அவரை அணியில் தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு அதிக தொகை வழங்கியிருப்பது கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகின் கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. இதேபோன்று, இன்னும் சில நாடுகளிலும் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தொடர்களில் வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெறுகிறார்கள். அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைவிட, ஐபிஎல் போன்ற தனியார் டி20 லீக் போட்டிகளில் விளையாடினால் பல மடங்கு அதிக பணம் கிடைக்கும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இதனால் பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதைவிட, ஐபிஎல் போன்ற தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் இப்படி, ஒவ்வொரு தொடர்களிலும் பிற நாட்டைச் சேர்ந்த பிரபலமான வீரர்கள் விளையாடுவது அந்த நாட்டுச் சர்வதேச அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பேட் கம்மின்ஸ்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடச் சொல்லி அதிக தொகை பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த ரகசியத் திட்டம் வெளியில் தெரிந்த நிலையில், அவரை அணியில் தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு அதிக தொகை வழங்கியிருப்பது கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. ’சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு முழுநேரமாக எங்கள் அணியில் மட்டும் விளையாடுங்கள்” என ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் அணி நிர்வாகம், பாட் கம்மின்ஸைக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு, இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் பணத்தைத் தருவதாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த ரகசியத் திட்டம் வெளியில் தெரிந்த நிலையில், அவரைத் தேசிய அணியில் தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 12 மில்லியன் டாலர், அதாவது சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி, இந்த ஒப்பந்தம், கம்மின்ஸ் 2029 வரை ஆஸ்திரேலியாவுக்கும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முன்னுரிமை அளிப்பார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதன்படி ஆண்டுக்கு 33 கோடி ரூபாய் வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ஆஸ்திரேலிய அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும். உலகின் எந்த டி20 தொடர்களிலும் பங்கேற்கக் கூடாது.

பே கம்மின்ஸ்
குறிப்பாக 2029ஆம் ஆண்டு வரை அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளாக உள்ளன. பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோருக்கும் இதே போன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன. ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம், மேற்கிந்திய தீவுகள் அணிகள் உதாரணம் காட்டப்படுகிறது. ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய அந்த அணியின் வீரர்கள், தனது சர்வதேச போட்டிகளைப் புறக்கணித்துவிட்டு லீக் போட்டிகளில் விளையாடச் சென்றனர். இது, அந்த அணியின் வீழ்ச்சிக்கு பங்கு வகித்தது. இதைக் கருத்தில் கொண்டே அதற்கு இடம்கொடுக்காத வகையில் ஆஸ்திரேலியா அணை போடுவதாகக் கூறப்படுகிறது.
