இந்த வாரம் தியேட்டரில் பிரதீப்பின் `LIK’, ஓடிடியில் ராதிகாவின் `தாய் கிழவி’ உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
1. Series: BEEF S2 (English) Netflix – Apr 8

Beef
Jake Schreier இயக்கி 2023ல் வெளியான சீரிஸ் Beef. அதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகிறது. இளம் தம்பதியான ஆஸ்லி – ஆஸ்டின் வாழ்க்கையை மையப்படுத்தி நகர்கிறது கதை.
2. The Boys S5 (English) Prime – Apr 8

The Boys S5
The Boys சீரிஸின் ஐந்தாம் மற்றும் கடைசி சீசன் வெளியாகிறது. சூப்பர் ஹீரோக்களை வேட்டையாடும் புட்சர் குழுவின் சாகசத்தின் இறுதி அத்யாயம்.
3. Kaakee Circus (Tamil) Zee5 – Apr 10

Kaakee Circus
சுபாஷ் செல்வம், முனீஸ்காந்த் நடித்துள்ள சீரிஸ் `Kaakee Circus’. சிறையில் நடக்கும் ஒரு திருட்டை மையமாக வைத்து நகரும் கதை.
4. OTT: Everybody Loves Sohrab Handa (Hindi) Zee5 – Apr 10

Everybody Loves Sohrab Handa
ரஜத் கபூர் இயக்கியுள்ள படம் `Everybody Loves Sohrab Handa’. தனது திருமண நாள் கொண்டாட்டத்தில் Sohrab Handa கொலை செய்யப்படுகிறார். அவரை கொன்றது யார்? ஏன்? என்பதே கதை
5. Thrash (English) Netflix – Apr 10

Thrash
Tommy Wirkola இயக்கியுள்ள படம் `Thrash’. புயல் ஒன்றில் சிக்கிக் கொள்ளும் பெண்ணின் கதை.
6. Outcome (English) Apple TV+ – Apr 10

Outcome
Keanu Reeves, Cameron Diaz நடித்துள்ள படம் `Outcome’. பிரபல ஹாலிவுட் நடிகர் வாழ்க்கையில் ஒரு வீடியோவால் வரும் சிக்கலே கதை.
7. Post Theatrical Digital Streaming: Tu Yaa Main (Hindi) Netflix – Apr 7

Tu Yaa Main
பிஜோய் நம்பியார் இயக்கிய படம் `Tu Yaa Main’. முதலை தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் ஜோடியின் கதை.
8. Kadhal Reset Repeat (Tamil) Prime – Apr 8

Kadhal Reset Repeat
விஜய் இயக்கிய படம் `Kadhal Reset Repeat’. ஒரே ஒரு நாள் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்ளும் சிக்கல் உள்ள ஒரு பெண்ணின் காதல் கதை.
9. Thaai Kizhavi (Tamil) Jio Hotstar – Apr 10

Thaai Kizhavi
ராதிகா நடிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கிய படம் `தாய் கிழவி’. ஊரையே மிரட்டும் கிழவி மரணப்படுக்கையில் இருக்க, ஊராரும் குடும்பத்தாரும் என்ன செய்கிறார்கள் என்பதே கதை
10. Naangal (Tamil) Sun NXT – Apr 10

Naangal
அவினாஷ் பிரகாஷ் இயக்கிய படம் `நாங்கள்’. ஒரு உடைந்து போன குடும்பமும், அதன் உறுப்பினர்களும் கதை.
11. O’ Romeo (Hindi) Prime – Apr 10

O’ Romeo
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடித்த படம் `O Romeo’. மோசமான ஒருவனுக்கு காதல் வந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.
12. Theatre: LIK (Tamil) – Apr 10

LIK
பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK’. 2040ல் உலகமே மிஷின் சொல்லும் ஜோடிகளை காதல் செய்யும் போது, சுயமாக ஒரு பெண் மீது காதல் கொள்ளும் இளைஞனுக்கு என்ன சிக்கல் வருகிறது என்பதே கதை.
13. Manithan Deivamagalam (Tamil) – Apr 10

Manithan Deivamagalam
செல்வராகவன், குஷி ரவி நடித்துள்ள படம் `மனிதன் தெய்வமாகலாம்’. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம்.
14. TN 2026 (Tamil) – Apr 10

TN 2026
நடராஜ், தம்பிராமையா நடித்துள்ள படம் `TN 2026′. வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு பிழைக்க வந்து, சினிமா நடிகராகி, பின்னர் அரசியலுக்கு செல்லும் நபரின் கதை.
15. Dacoit (Telugu) – Apr 10

Dacoit
அதிவி ஷேஷ், மிருணாள் தாக்கூர் நடித்துள்ள படம் `Dacoit’. தனக்கு துரோகம் செய்த முன்னாள் காதலியை பழிவாங்க கிளம்பும் காதலனின் கதை.
