முதலில் எங்கள் திருமணத்திற்கு இந்து – கிறிஸ்தவம் என மதம் தடையாக வந்தது. குடும்பத்தினர் முதலில் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை, பின்னர் ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் இணைந்து 32 வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம்.
முன்னணி இந்திய இயக்குநர்களில் ஒருவர் ப்ரியதர்ஷன். இவர் பிரபல நடிகை லிஸியை 1990இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால் இப்போது மீண்டும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள `Bhooth Bangla’ படம் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுஅகுறித்த பேட்டி அளித்த ப்ரியதர்ஷனிடம், மீண்டும் லிஸியுடன் இணைந்தது குறித்து கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ப்ரியதர்ஷன், “முதலில் எங்கள் திருமணத்திற்கு இந்து – கிறிஸ்தவம் என மதம் தடையாக வந்தது. குடும்பத்தினர் முதலில் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை, பின்னர் ஏற்றுககொண்டார்கள். நாங்கள் இணைந்து 32 வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதில் ஒரு சலிப்பும், ஈகோவும் வந்தது. என்னால் நீயா, உன்னால் நானா? என்ற ரீதியிலான ஈகோ. அது ஒரு கசப்பான உறவாக மாறியது.

Lissy
அதனால் நாங்கள் இருவரும் பிரிய முடிவெடுத்தோம். ஆனால் சில வருடங்கள் கடந்த பிறகு, ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதை உணர்ந்தோம். எனவே மறுபடி இணைந்துவிட்டோம், அவ்வளவுதான். இதன்மூலம் ஓர் உண்மையான அன்பு எங்களுக்கு இடையே மறைந்திருந்தது எனலாம். நான் அவரை மிஸ் செய்தேன், அவரும் என்னை மிஸ் செய்தார். வாழ்க்கையில் ஒரு துணை என்பது மிக முக்கியமானது. ஆனாலும் பிரிந்திருந்த காலத்தில் நாங்கள் வேறு ஒரு திருமணத்தை நோக்கிச் செல்லவே இல்லை. அடுத்து வரும் நபர் இன்னும் மோசமானவராக இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமதான் காரணம். அதனை நாங்கள் மீண்டும் சந்தித்தபோதுதான் உணர்ந்தோம” என்றார்.
