பிரதீபுக்கு இது நான்காவது படம். தொடர்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். தெலுங்கிலும் `ட்யூட்’ படம் மூலம் பலருக்கும் பிடித்த ஹீரோ ஆகிவிட்டார்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK’. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான Pre-Release Event ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “எங்களுக்காக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனில் ரவிப்புடிக்கு நன்றி. இந்தப் படம் பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்த விஷயங்களை சொன்னீர்கள். நீங்கள் சொல்லிவிட்டால் மொத்த தெலங்கானா, ஆந்திராவும் சொன்னது போலத்தான். அதன்்மூலமாக இப்படம் எப்படி ஓடப்போகிறது என்பது புரிந்துவிட்டது.
இந்தப் படம் எதிர்காலத்தில் நடக்கும் கதை. 2040இல்தான் கதையே ஆரம்பிக்கும். ட்ரெய்லரில் நீங்கள் ரசித்ததுபோலவே படமும் இருக்கும். பிரதீபுக்கு இது நான்காவது படம். தொடர்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். தெலுங்கிலும் `ட்யூட்’ படம் மூலம் பலருக்கும் பிடித்த ஹீரோ ஆகிவிட்டார். பெரிய இடத்திற்கு வந்துவிட்டார். இந்தப் படம் ஆரம்பித்போது வளர்ந்துவரும் நடிகராக இருந்தார், இப்போது பெரிய நடிகராகிவிட்டார். அவரது நடிப்பும் இதில் சிறப்பாக இருக்கும்.
இது ஒரு நல்ல காதல் கதை. கீர்த்தி ஷெட்டியின் நடிப்பும் மிக அருமையாக இருக்கும். அடுத்து முக்கியமான விஷயம் அனிருத்தின் பாடல்கள். மிகச் சிறப்பான பாடல்கள், அதற்கு ரவிவர்மனின் விஷுவல் எல்லாம் அருமையாக இருக்கும். இந்தப் படத்தை மிக அர்ப்பணிப்போடு எடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். கோடை விடுமுறையை LIK உடன் கொண்டாடுங்கள” என்றார்.
