மதுரையில் 213 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Summary
மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை சூட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 21ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை 213 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வெல்லும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

முக ஸ்டாலின்
இதற்கு முன்பு திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்ததில்லை என்பதால், இந்தமுறை ஆட்சியை தக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வரும் திமுக அரசு, தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.
அந்தவகையில் மதுரையில் திறக்கப்படும் புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயரை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வரும் 21ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார்.
மதுரை மேம்பாலத்துக்கு நேதாஜி பெயர்..
மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சூட்டியுள்ளார். தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை, 213 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை வரும் 21ஆம் தேதி, அவர் திறந்து வைக்கவுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், நாட்டின் விடுதலைக்காக தனக்கென தனிப்பாதையை உருவாக்கியவர் எனவும், தென் மாவட்ட மக்களை விடுதலை போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளம் எனவும், நேதாஜிக்கு புகழ்மாலை சூட்டியுள்ளார்.
