வேளாண் தொழிலை நம்பி உள்ளவர்கள் 25% ஆக குறைந்துவிட்டதாக மாநிலதிட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வேளாண் தொழிலை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறினார்.

பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்த பின் ஜெயரஞ்சன் செய்தியாளர் சந்திப்பு
சென்னை எழிலகத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுநல்ல விஷயம் என்றும், ஆண்டுமுழுவதும் வேலை உள்ள தொழிலாக வேளாண் தொழில் இல்லாத நிலையில் தேவைக்கு அதிகமானோர் அதிலிருந்து விலகுவது நல்லது என்றும் கூறினார்.
