அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன.
வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி எழுதப்பட்ட ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. ’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும், ‘காங்கிரஸால் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான்கு சரணங்கள் உட்பட பாடலின் முழு ஆறு சரண பதிப்பும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்பட வேண்டும். இந்த பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும். தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் இரண்டும் ஒரே நிகழ்வில் பாடப்பட்டால், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ச்ட்டத்தின்கீழ், தேசிய பாடலகளை சீர்குலைப்பவர்களுக்கோ அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன. பாடலின் சில வரிகள் தாயகத்தை தெய்வமாகச் சித்தரிப்பது இஸ்லாமிய நம்பிக்கையான ‘ஓரிறை கொள்கைக்கு’ முரணானது என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன. இந்த உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் எச்சரித்துள்ளன. முன்னதாக, வந்தே மாதரம் பாடலில் மொத்தமுள்ள 6 சரணங்களில், இரண்டு சரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 4 சரணங்கள், இந்துக் கடவுள்களைப் போற்றும் வகையில் இருந்ததால், முஸ்லிம் தலைவர்கள் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டும் எனக் கருதி அவற்றை நீக்க முடிவு செய்யப்பட்டது.

Model image
அதேநேரத்தில், வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வாழத் தகுதியோ, உரிமையோ இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை தாக்கி பேசிய அவர், சில அரசியல் கட்சிகள் இந்தியாவில் உண்பதாகவும், ஆனால் வந்தே மாதரத்தை பாட மறுப்பதாகவும் விமர்சித்தார். உத்தரப் பிரதேசம் கலவர பொருளாதாரத்திலிருந்து கோயில் பொருளாதாரத்துக்கு மாறிவிட்டதாகவும், யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
