படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட கட்டுகளையும், மியூட்டுகளையும் சொன்னார்கள். அவை எதுவும் இல்லாமல் கொண்டுவர முயன்றாலும், பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்பதால், சென்சார் சொன்ன திருத்தங்களைச் செய்து, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா எனப் பலரும் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் `பராசக்தி’. சிவகார்த்திகேயனின் 25வது படம், இந்தி திணிப்பு எதிரான மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான படம் என இதன் மேல் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

Parasakthi
60களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி, கற்பனை கலந்து இப்படத்தை எடுத்திருந்தார் சுதா கொங்கரா. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட கட்டுகளையும், மியூட்டுகளையும் சொன்னார்கள். அவை எதுவும் இல்லாமல் கொண்டுவர முயன்றாலும், பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்பதால், சென்சார் சொன்ன திருத்தங்களைச் செய்து, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டனர். அதே சமயம், லண்டன் உள்ளிட்ட சில நாடுகளில் படம் இந்த திருத்தங்கள் இல்லாமல் தான் வெளியானது
திரையரங்க வெளியீட்டில் இப்படம் ஓரளவு பேசுபொருளானாலும், பரவலாக படம் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. விமர்சனத்தில் படம் பின்தங்கினாலும் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்தது.

SivakarthikeyanParasakthi
இந்தச் சூழலில்தான் `பராசக்தி’ சில நாட்களுக்கு முன்பு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடி நிமிடங்கள் ஸ்ட்ரீமாகி சாதனையை படைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்போது இந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக, படத்தின் அன் கட் வெர்ஷன், அதாவது தணிக்கையில் நீக்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ள பாதிப்பை விரைவில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. அநேகமாக அந்த வெர்ஷன் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த அன் கட் வெர்ஷன் வெளியானால் படம் மீண்டும் பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
