அமைதியான மனதால் மட்டுமே செயல்புரிய முடியும். அமைதியில்லாத மனம் அல்லது அமைதியிழந்த மனம் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு உகந்ததாக இருக்காது. அமைதியான மனதுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான எளிய குறிப்புகளை விளக்குகிறது இந்ததொகுப்பு.
நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கேன், மன உளைச்சலாக இருக்கேன் என்ற வார்த்தைகளை அதன் பொருள் தெரியாமலேயே சிறுவர்கள்கூட உச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏதுமற்ற அற்ப விஷயங்களுக்காக வயது வித்தியாசமின்றி மன அழுத்தத்துடன் பலர் தவிக்கின்றனர். உறவினர்,பெற்றோர், உற்ற துணை மரணம் ஆகிய பேரிழப்புகளின் சூழல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அமைதியின்றி தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. கொந்தளிக்கும் மனதை அமைதிப்படுத்த சில எளிய வழிகளை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Work place StressTwitter
குறிப்பாக ஐந்து, நான்கு, மூன்று,இரண்டு, ஒன்று என்ற உத்தி உங்கள் ஐம்புலன்களின் உணர்வுத் திறனைமீட்டெடுக்கக் கூடியவை. ஐம்புலன்களும் நிகழ்நேரத்தில் கூர்மையாக இருக்க வேண்டியது முக்கியம். ஐம்புலன்களையும் உங்கள் கட்டுக்குள் வைக்க சுவாசப் பயிற்சி, தியானம் அல்லது யோகா பயிற்சி உங்களுக்கு உதவும். இதையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும்கூட வெறும் காலில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதும் சிறந்ததாகும். உங்களுக்கு பிடித்தமான பாடலை முணுமுணுத்தபடி இருக்கலாம். தொடர்ச்சியாகவும், நன்றாகவும் உரிய தருணத்தில் தூங்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கைபேசி, தொலைக்காட்சி போன்ற திரைகளுடன் பொழுதுபோக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள். கஃபைன், நிகோட்டின் போன்ற பொருட்களைத் தவிர்க்கவும். இயற்கையோடு இணைந்திருப்பதும் கற்பனை வளத்தில் நாட்டம் கொண்டிருப்பதும் நல்லது. இதில் மிகவும் முக்கியமானது இந்த எளிய ஆலோசனைகளைக்கூட உங்களால் கடைப்பிடிக்க முடியாவிட்டால் தொழில்முறை வல்லுநர்களை அணுக வேண்டியது அவசியமாகும்.
