நாம் டோப்பமைனின் கட்டுப்பாட்டில் வாழ்கிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அமைதியான, மகிழ்ச்சியான மூளையைப் பெறுவதற்கு நாம் ஆக்ஸிடாக்ஸினுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதற்கு நம் இணையருடனான உடல்ரீதியான தொடுதல், குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுதல், நல்ல விஷயங்களைப் பாராட்டுதல் போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்.
நாம் டோப்பமைனின் கட்டுப்பாட்டில் வாழ்கிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். டோப்பமைன் என்பது நம் மூளையிலும் உடலிலும் சுரக்கும் ஒரு வேதிப்பொருள்.நாம் இருப்பது கைப்பேசியின் உலகம். கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் நம் உடலில் டோப்பமைன் அதிகமாகச் சுரக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இது நம் உடலில் ஆக்ஸிடாக்ஸினைக் குறைத்து பதற்ற நோய்க்கு இட்டுச்செல்கிறது. ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு டோப்பமைன் ஒரு நாளில் சில தடவைதான் சுரந்திருக்கிறது; தற்காலத்திலோ எப்போதெல்லாம் கைப்பேசி பார்க்கிறோமோ அப்போதெல்லாம் டோப்பமைன் அதிகரிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் நம் உடல் அதீதமாக டோப்பமைனுக்கு அடிமையாகிறது. ஆகவே, சிறிதளவு சலிப்பான தருணத்தைக்கூட தாங்க முடியாதவர்களாக நாம் ஆகிறோம் என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் அன்றாட வாழ்வோடு தொடர்பு ஏற்படுத்த முடியாதவர்களாக நாம் ஆகிறோம். குடும்பத்தினரோடு செலவிட வேண்டிய நேரத்தில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் ஒவ்வொரு முறையும் டோப்பமைன் அதிகரித்து ஆக்ஸிடாக்ஸினைக் குறைக்கிறது.

ஆக்ஸிடாக்ஸின் குறைவதால் நாம் பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் நிம்மதியின்மைக்கும் ஆளாகிறோம் என்கிறார்கள் நிபுணர்கள். அமைதியான, மகிழ்ச்சியான மூளையைப் பெறுவதற்கு நாம் ஆக்ஸிடாக்ஸினுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதற்கு நம் இணையருடனான உடல்ரீதியான தொடுதல், குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுதல், நல்ல விஷயங்களைப் பாராட்டுதல் போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் டோப்பமைன் பாலைவனத்திலிருந்து விடுபட்டு ஆக்ஸிடாக்ஸின் சோலைவனத்துக்குத் திரும்ப முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
