உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அடுத்த தலைமை நீதிபதியாக சூரியாகந்தை பரிந்துரை செய்து கடிதம் அளித்துள்ளார்.
Summary
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் நவம்பர் மாதம் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்துக்கான பணிகள் தீவிரமாகியுள்ளன.
நீதிபதி சூரியகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அளித்துள்ளார்.

பி.ஆர் கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் நவம்பர் மாதம் 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்துக்கான பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் நடைமுறையின் படி, மத்திய சட்ட அமைச்சகம் புதிய தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதும், அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்கு அடுத்த நிலைகளில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதியை பரிந்துரைப்பார். மேலும், இந்த பணிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதிவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதம் முன்பாக தொடங்கும்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் வரும் நவம்பர் மாதம் 23-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்-க்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, நீதிபதி சூரியகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து கடிதம் அளித்துள்ளார். அதன்படி, 53-வது உச்ச தலைமை நீதிபதியாக சூரிய காந்த் நவம்பர் மாதம் 23-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரில் 1962- ஆண்டு பிறந்த நீதிபதி சூரிய காந்த், 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், அவரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
