இந்தியாவில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது..
Summary
இந்தியாவில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையில் வலுவான அணியாக களமிறங்கவுள்ளது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில், இரண்டாவது குவஹாத்தியில் நடைபெறவுள்ளது. WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 4வது இடத்திலும் உள்ளதால் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென்னாப்பிரிக்கா அணி, 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.

தென்னாப்பிரிக்கா
நவம்பர் 14 முதல் 26 வரை முதலில் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பாகிஸ்தானில் நந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்காத டெம்பா பவுமா டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்..
முதல் டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி குவஹாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்திலும் நடக்கவிருக்கிறது. WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி 4வது இடத்திலும் நீடிப்பதால் இந்த டெஸ்ட் தொடர் கவனம் பெற்றுள்ளது..
இந்தியா தொடருக்கான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரெவிஸ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரின்
