ஆளவந்தானுக்கு பின் தமிழ்ப் படங்களில் ரவீணா நடிக்கவில்லை என்றாலும், பிரஷாந்த் நீல் இயக்கிய `KGF 2′ படத்தில் ரமிகா சென் என்ற பாத்திரத்தில் நடித்து பரவலான ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார்.
90களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரவீணா டான்டன். `Mohra’, `Ziddi’, `Shool’, `Ghulam-E-Musthafa’, `Aks’, `Daman: A Victim of Marital Violence’ எனப் பல இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், பி வாசு இயக்கத்தில் அர்ஜூன் நடித்த `சாது’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த `ஆளவந்தான்’ படத்திலும் நடித்தார்.
இதன் பின் தமிழ்ப் படங்களில் ரவீணா நடிக்கவில்லை என்றாலும், பிரஷாந்த் நீல் இயக்கிய `KGF 2′ படத்தில் ரமிகா சென் என்ற பாத்திரத்தில் நடித்து பரவலான ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார். இப்போது 24 வருடங்களுக்கு பிறகு தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரவீணா. `ஜென்டில்வுமன்’ படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் `லாயர்’ படத்தில் நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Raveena Tandon Suriya 46, Lawyer
இன்னொரு தமிழ்ப்படம், `லக்கி பாஸ்கர்’ இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `சூர்யா 46′. ரவீணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இப்படத்தில் இணைந்துள்ளதை அறிவித்தது படக்குழு. பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ள ரவீணா பேக் டூ பேக் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
