லோகேஷ் ரஜினியிடம் ஒரு லைன் சொன்னதாகவும், அது பெரிய அளவில் ஈர்க்காமல் போனதால் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும் கூலியில் கிடைத்த ரிசல்ட் விமர்சன ரீதியில் சரி இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
Summary
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான கதை மற்றும் இயக்குநர் முடிவாகவில்லை என்றாலும், நெல்சனின் லைன் ரஜினிக்கு பிடித்ததாக கூறப்படுகிறது. இதே நேரத்தில், ரஜினி சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் இந்திய சினிமாவில் பலரும் எதிர்பார்க்கும் ஒன்று. இது குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், வெவ்வேறு நிகழ்வுகளில் இணைந்து படம் செய்வதை உறுதி செய்திருக்கிறார்கள். முதலில் இப்படத்தை லோகேஷ் இயக்குவார் என தகவல்கள் வந்தன. ஆனால் இப்படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என ரஜினி தெரிவித்தார். தற்போது இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என தகவல்கள் வருகின்றன.

ஜெயிலர்
`ஜெயிலர் 2’வுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம், ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் என சொல்லப்பட்டது. இந்தப் படத்திற்காக லோகேஷ் ரஜினியிடம் ஒரு லைன் சொன்னதாகவும், அது பெரிய அளவில் ஈர்க்காமல் போனதால் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும், கூலியில் கிடைத்த ரிசல்ட் விமர்சன ரீதியில் சரி இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயம் `ஜெயிலர் 2′ படப்பிடிப்பின் போது எனக்கும் கமலுக்கும் ஏற்ற கதை இருக்கிறதா என ரஜினி கேட்டதாகவும், அதற்கு நெல்சன் சொன்ன லைன் பிடித்து போனதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயிலர் 2 படப்பிடிப்பே பிப்ரவரி வரை நடக்க உள்ளது, ரிலீஸ் ஜூன் மாதம் திட்டமிடுவதால் அந்த வேலைகளுக்கு நடுவே அந்த ஒன்லைனை டெவலப் செய்ய நெல்சனுக்கு நேரம் கிடைக்குமா என்ற சிக்கல் இருந்தது.
அந்த காலகட்டத்தில் ஒரு படம் நடிக்க ரஜினி முடிவு செய்திருக்கிறாராம். அதுவே சுந்தர் சி இயக்கும் படம். சுந்தர் சி ரஜினியிடம் ஒரு லைன் கூற, அது அவருக்கு பிடித்துவிட்டதாம். இப்போது சுந்தர் சி கதையை டெவலப் செய்யும் வேளைகளில் இருக்கிறார் என்கிறார்கள். இப்படத்தில் ரஜினி நடிக்கும் நேரத்தில், நெல்சன் தன் கதையை தயார் செய்வார். இதே நேரம் கமல்ஹாசன், அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் படம் டிசம்பரில் துவங்க இருக்கிறதாம். எனவே ரஜினி – கமல் இந்தப் படங்களை முடித்து வரவும், நெல்சன் ப்ரீ புரொடக்ஷனை முடிக்கவும் சரியாக இருக்கும். இன்னொரு பக்கம் சுந்தர் சி – விஷால் கூட்டணியில் ஒரு படம் நடக்க இருக்கிறது எனவும் தகவல் இருக்கிறது. இவற்றில் எது உறுதியாகிறது என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போதே தெரியும்.
