காஸா மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாண்டு போரினால், 85 விழுக்காடு பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) பிராந்திய இயக்குநர் எட்வார்ட் பெய்க்பெடர் கவலை தெரிவித்துள்ளார்.
Summary
இஸ்ரேல்-காஸா போரானது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தின்படி, இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட எஞ்சிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி வருகின்றன.

காஸா அமைதி ஒப்பந்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை
இந்தசூழலில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய போர்த்தாக்குதலில் 85% பள்ளிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும், காஸாவின் குழந்தைகள் அனைத்தையும் இழந்த தலைமுறையாக மாறியுள்ளதாகவும் யுனிசெஃப் (UNICEF) பிராந்திய இயக்குநர் எட்வார்ட் பெய்க்பெடர் கவலை தெரிவித்துள்ளார்.
142 பள்ளிக்கூடங்கள் முற்றிலுமாக அழிப்பு..
பாலஸ்தீன அதிகாரசபையின் கீழ் இருந்த 300 பள்ளிகளில் 142 முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற பள்ளிக்கூட கட்டடங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

காசா மக்கள்
போரில் பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், காஸாவின் இடிபாடுகளுடைய தெருக்களில் இழப்புகளை மட்டுமே சந்தித்த தலைமுறையாக குழந்தைகள் அலைந்து திரிவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இடிந்த பள்ளிக்கூடங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட இஸ்ரேல் அனுமதி மறுப்பதாக எட்வார்ட் குற்றஞ்சாட்டினார்.
