கபடி மரியாதைக்கான யுத்தம் மற்றும் தடைபட்ட பாதைகளில் ஓடுவது இடைவிடாத போராட்டத்தையும் குறிக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்’. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இப்படத்தை பார்த்து இயக்குநர்கள் சேரன், நந்தா பெரியசாமி, இரா சரவணன், வசந்த பாலன் போன்ற இயக்குநர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இப்போது இபபடத்தை இயக்குநர் வெற்றிமாறன் வாழ்த்தி இருக்கிறார்
“பைசன் என்பது மீள்திறன் மற்றும் எதிர்ப்பை பிரதிபலிக்கும் உறுதியான தியானம். துருவ் விக்ரம் இயல்பான, மறக்க முடியாத நடிப்பை வழங்கி இருக்கிறார், அது சக்திவாய்ந்த உவமைகளின் வழியே வலுப்பெறுகிறது. பைசன் எலும்புக்கூடு வலிமை மற்றும் பிழைத்திருத்தலையும், கபடி மரியாதைக்கான யுத்தம் மற்றும் தடைபட்ட பாதைகளில் ஓடுவது இடைவிடாத போராட்டத்தையும் குறிக்கிறது.
அமைதியான அதே நேரம் வெடிக்க தயாராக இருக்கும் பைசன், கிட்டனின் அடக்கப்பட்ட கோபத்தை பிரதிபலிக்கிறது; கருப்பு – வெள்ளை மற்றும் வண்ணங்களுக்கு இடையிலான மாற்றங்கள் இழப்பு, நினைவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.” என பாராட்டி இருக்கிறார் வெற்றிமாறன்.
படத்தின் ஐந்து நாள் உலகளாவிய வசூல், 35 கோடி என அறிவித்துள்ளனர். மேலும் `பைசன்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு இன்று (அக் 24) தேதி வெளியாகியுள்ளது.
