
வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளிக் குவித்து தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தற்போது வரை ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்தடுத்து புதிய படங்கள் திரைக்கு வந்தாலும் காந்தாரா படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று தீபாவளியையொட்டி சில புதிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இருப்பினும், பல திரையரங்குகளில் காந்தாரா திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா படத்தின் 2ஆம் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்துடைய 2 ஆவது ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து தீபாவளியையொட்டி படக்குழு புதிய காட்சிகளுடன் 3 ஆவது ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தியாவில் மட்டுமின்றி காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியிடப்பட்ட வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளிக் குவித்து தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ. 717 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் தொடர்ந்து காந்தாரா படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஆகிக் கொண்டிருப்பதால் இந்த திரைப்படம் சில வாரங்களில் ரூ. 1000 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.