
ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவிகள் கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் சார்பாக நாட்டு நல பணி திட்டம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம் ஊட்டி மேல் கவட்டியில் அக்.6 முதல் அக்.12 வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. முகாமின் முதல் நாள் காலை 10 மணிக்கு தொடக்க விழா தொடங்கப்பட்டது. இதற்கு கல்லூரியின் செயலர் மோதிலால் கட்டாரியா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.

அதன் பின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.கல்பனா பொறுப்பில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சமூக சேவையின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினர். தொடர்ந்து நடைபெற்ற துவக்க விழாவில் ஊர் தலைவர் நடராஜ், துணைத் தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர் ராஜா மணி ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளை ஊக்குவித்தனர்.

முனைவர் பி.கல்பனா அவர்கள் நிகழ்வின் தொடக்கமாக வரவேற்புரை வழங்கினார். அதன் பின் முனைவர் கா.தவமணி அவர்கள் ஊர் தலைவர் அவர்களின் சிறப்பிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் முனைவர் எஸ்.வித்யா அவர்கள் துணைத்தலைவர் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினர். அதன் பின் மாணவிகள் அனைவரும் கிராமத்தை சுத்தம் செய்வதற்காக குழுவாக பிரிக்கப்பட்டனர்.

மாணவிகள் சார்பில் கணிதத்துறை மாணவி நிவேதினி நன்றியுரை ஆற்றினார். கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்தம் இடம், சமுதாயக் கூடம் போன்ற இடங்களை சுத்தம் செய்தனர். தன்னார்வல்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்வைத் தொடர்ந்து இரண்டாவது நாள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்காக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இளம் வயதில் இருந்தே சமூக சேவையிலும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டு சிறந்த மாணவிகளாக நாட்டையும் எதிர்காலத் தலைமுறையினரையும் வழிகாட்டும் விதமாக பெண்கள் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.