பலருக்கு அது குறைந்த ஆற்றல், தலைவலி, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துமென குறிப்பிடுகின்றனர்.
காலை உணவு மிகவும் முக்கியமானது என பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், ஊட்டச்சத்து நிபுணர்கள் அதனை முழுவதுமாக ஏற்க மறுக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் காலை உணவு உண்ணுவதை விட, ஒட்டுமொத்த உண்ணும் முறை, உணவின் தரம், உடல் செயல்பாடு, தூக்கம், வயது, உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை, ஒருவரது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

Morning
உடல் நல பாதிப்பில்லாதோருக்கு காலை உணவைத் தவிர்ப்பது தானாகவே உடலைப் பாதிக்காது எனவும், ஆனால் பலருக்கு அது குறைந்த ஆற்றல், தலைவலி, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துமென குறிப்பிடுகின்றனர். நாளின் பிற்பகுதியில் அதிகப்படியான உணவு உட்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.
அதேவேளையில், குழந்தைகள், பதின் பருத்துவத்தினர், கர்ப்பிணிகள், முதியோருக்கு, காலை உணவு நிலையான ஆற்றலை வழங்கும் எனவும், அவர்களது தசைச் செயல்பாட்டை அதிகரிக்கும் எனவும், ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். காலை உணவு சமச்சீரானதாக இருக்க வேண்டுமென கூறும் அவர்கள், வெஜிடபுள் உப்புமா, சாம்பாருடன் இட்லி, தோசை ஆகியவை நல்ல தேர்வு எனவும் பரிந்துரைக்கின்றனர்.
