
மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் மாதம் தீபாவளி வரவுள்ள நிலையில், 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பை அரசு பண்டிக்கைக்கு முன்பாக வெளியிடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சுமார் 5 மில்லியன் ஊழியர்களும், 6.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள், சரி இனி 8வது சம்பள கமிஷன் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்ன என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.
இன்னும் சில வாரங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வரலாம் என செய்தி வட்டாரங்கள் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் மத்திய அரசு தீபாவளிக்கு முன்பு 8வது சம்பளக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் இது நாடு முழுவதும் சுமார் 5 மில்லியன் ஊழியர்களுக்கும் 6.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய அறிவிப்பாக இருக்கும்.
வெளியாகி உள்ள செய்தி அறிக்கைகளின்படி, 8வது சம்பளக் குழு 2026 இல் செயல்படுத்தப்படலாம், அதேசமயம் 2027 வரை ஒத்திவைக்கப்படலாம் என்று முன்னர் நம்பப்பட்டது. சமீபத்தில், அரசு ஊழியர் அமைப்புகள் அரசு ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் (GENC) பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து இது குறித்த தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து 8வது ஊதியக்குழு குறித்த மாநில அரசுகளுடன் அரசு தீவிரமாக விவாதித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிந்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதனால் ஆணையம் மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக்குழு அப்டேட் வந்தால் அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழுவிற்காக அரசு ஊழியர்கள் காத்திருப்பதன் பெரிய காரணமே சம்பள உயர்வுதான். அப்படி அறிவிப்பு வெளியானால் ஊழியர்களின் மிகப்பெரிய நம்பிக்கை அவர்களின் அடிப்படை சம்பள கட்டமைப்பில் உயர்வு இருக்கும். அறிக்கைகளின்படி, 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரக்கூடும். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தால் போராடும் ஊழியர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருக்கலாம்.
சம்பள கமிஷன் பணி என்ன?
ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு சம்பளக் குழு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நோக்கம் அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவதாகும். முன்மொழியப்பட்ட 8வது சம்பளக் குழு இந்த மரபைத் தொடரும், இது மில்லியன் கணக்கான குடும்பங்களின் வருமானத்தை நேரடியாக பாதிக்கும்.
அகவிலைப்படியிலும் (DA) மாற்றங்கள் இருக்குமா?
சம்பள உயர்வு அறிவிப்புடன், அரசு ஊழியர்களும் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வை குறித்தும் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஜனவரி-ஜூன் 2025 காலகட்டத்திற்கு அகவிலைப்படி 2% மட்டுமே உயர்த்தப்பட்டது. இருப்பினும், தற்போதைய பணவீக்க விகிதங்களைக் கருத்தில் கொண்டு, ஜூலை-டிசம்பர் 2025-க்கு அகவிலைப்படி உயர்வு 3% ஆக உயரலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தீபாவளிக்கு முன்பே 8வது ஊதியக்குழு குறித்து அறிவிப்பு வெளியாகுமா?
தீபாவளிக்கு முன்பே 8வது ஊதியக்குழு அமைப்பது மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என ஊழியர்களின் நம்பிக்கையாக இருக்கிறதே தவிர்த்து, உறுதியாக அறிவிக்கப்படும் என்பது குறித்து எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலவரம்.
ஒரு வேலை அரசு ஜிஎஸ்டி வட்டி குறைப்பு போலவே, தீபாவளிக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 8வது சம்பள கமிஷன் அமைப்பது மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டால், அது ஊழியர்களுக்கு இரட்டை பரிசாக இருக்கும்.