Skip to content
LeeNews24×7
நேரலைதேடு

விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது

விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது

Ramkumar Rajendran

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பலிஜ நாயுடு மண்டபத்தில், சுவாமி விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதனை அமைச்சர் சம்பத்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள், நடன நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், தீபாவளி கால காளி பூஜை கொல்கத்தாவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்றும், அதேபோல் கோவையில் நடைபெறும் இந்த விழாவில் பெங்காலி சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து பங்கேற்று வழிபாடு நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்