Skip to content
நேரலை

லீ நியூஸ் நேரலை

லீபுக்

களத்தில் உள்ள எங்கள் செய்தியாளர்கள் அனுப்பியவை, அனுப்பிய உடனே.

லீநியூஸ் →

LeeNews

ஆரக்கிள் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி.. ’இதுதான் உங்களின் கடைசி நாள்’ 2,500 ஊழியர்கள் பணிநீக்கம்?

ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Summary இந்தியாவில் செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஆரக்கிள், நிறுவன மறுசீரமைப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளை காரணம் காட்டி சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) இந்தியாவில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கிளவுட் சேவைகள், மென்பொருள் மேம்பாடு பிரிவுகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. Oracle அந்தவகையில் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle) தனது ஊழியர்களுக்குக் காலை 6 மணிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “இன்றே உங்களின் கடைசி வேலை நாள்” எனக் கூறி உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல்களும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

2 பார்வைகள்

LeeNews

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது குறித்து எழுந்த கேள்விக்கு ஜே.பி. நட்டா விளக்கம் கொடுத்துள்ளார். Summary பாரத ரத்னா விருது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஜே.பி. நட்டா, மோடிக்கு விருது வழங்குவது பற்றி பாஜக விவாதிக்கவில்லை என்று கூறினார். பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவது குறித்து பாஜகவில் இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். JP Nadda இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், மோடி சர்வாதிகாரி போல செயல்படுவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி உலகின் மிகச் சிறந்த ஜனநாயகத் தலைவர் என்றும் நட்டா புகழாரம் சூட்டினார்.

LeeNews

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 254 ரன்கள் குவித்து மிரட்டியது இங்கிலாந்து அணி. Summary சவுத்தாம்டனில் நடந்த முதல் டி20யில் இங்கிலாந்து, இலங்கை பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவரில் 254 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள், கேப்டன் ஹாரி ப்ரூக் 42 பந்தில் சதம் உட்பட 49 பந்தில் 114 ரன்கள் குவித்தார். பதிலுக்கு இலங்கை 19 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல்அவுட்; சோனி பேக்கர் 3 விக்கெட். தொடரில் இங்கிலாந்து 1-0 முன்னிலை. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்தது. தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 80 ரன்கள் அடித்து அவுட்டாகினார். ஆனால் மறுமுனையில் காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்து 42 பந்தில் சதமடித்ததோடு 49 பந்தில் 114 ரன்கள் குவித்தார். ஹாரி ப்ரூக்கின் ருத்ரதாண்டவ பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 254 ரன்களை குவித்தது. 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19 ஓ…

LeeNews

18 நாட்களிலேயே முடிவு.. கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

இவ்வளவு ஆழத்தில் உள்ள கனிமங்களை வெட்டி எடுப்பது கடல்சார் சூழலியல் மண்டலத்தைப் பாதிக்கும் என்பதால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளன பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிp படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், இதுதொடர்பான விவாதங்களும் தொடங்கியுள்ளன. சீனாவின் ‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், 7 நீர்மூழ்கிச் சோதனைகள் மூலம் பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிப் படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, சீனாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், அதாவது மேற்கு பசிபிக் பெருங்கடலின் பேக்-ஆர்க் பாசின் (Back-arc basin) மண்டலத்தில் அமைந்துள்ளது. கடலடி வெப்பநீரூற்றுப் பகுதிகளில் சல்பைடு படிமங்களால் உருவான 3 பெரிய கூம்பு வடிவ பாறைப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. model image தங்கத்துடன் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்த கால்கோபைரைட், பைரைட் மற்றும் ஸ்பேலரைட் போன்ற உயர் மதிப்புள்ள கனிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வின்படி, ஒரு டன் தாதுவில் 15.4 கிராம் வரை தங்கமும், ஒரு டன் தாதுவில் 1.27 கிலோகிராம் (1,271…

LeeNews

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்துள்ளார். சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக இருந்து வந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃபிளமிங், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். பின்னர், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹசி், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீபன் பிளெமிங், தம்முடன் பணிபுரிய மைக் ஹசிக்கு அழைப்பு விடுத்தார். Michael Hussey ஆனால், முழு நேர பன்னாட்டுப் பயணங்கள் மற்றும் கடினமான அட்டவணை காரணமாக ஹசி இந்த வாய்ப்பை நிராகரித்தாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பகுதிநேர ஆலோசகர் பொறுப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார். இந்த பகுதிநேரப் பொறுப்பு, ‘தி ஹண்ட்ரட்’ மற்றும் பிற டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக செயல்படவும், ஆஸ்திரேலியாவின் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக தொடரவும் அவருக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதேநேரத்தில், ஹசி…

LeeNews

முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. எப்போது தெரியுமா?

2027-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி 4 உலகளாவிய கோப்பை தொடர்களை நடத்திவருகிறது. அதேபோன்று, மகளிர் தொடர்களையும் விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இத்தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. முன்னதாக, இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இத்தொடர், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. Harmanpreet Kaur, jay shah மகளிர் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் டி20 வடிவில் விளையாடப்படும். லீக் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இப்போட்டிகள், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கி 28 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆறு அணிகள் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் வதோதராவில் உள்ள வதோதரா சர்வதேச கி…

LeeNews

மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’!

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர், பிரியங்கா மோகன் மற்றும் காயடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மஞ்சணத்தி படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் எஸ்.பி.அரவிந்த் இயக்கும் இப்படத்தில் நடிகர் அமீர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இதில் சுவாசிகா மற்றும் அனிஷ்மா அனில் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்கிறார்.

LeeNews

இது எதற்கான அறிகுறி..? வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான துர்கை கோயில்.. அச்சத்தில் மக்கள்!

பீகார் பாகல்பூரில் கங்கை நதி அரிப்பினால் 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்க்கை கோவில் ஆற்றில் மூழ்கியது. Summary பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், அதிவேக நீரோட்டம் மற்றும் கடுமையான கரை அரிப்பால் அடிப்பகுதி பலவீனமடைந்து நொடிகளில் இடிந்து ஆற்றில் முழுவதும் மூழ்கியது. பல தலைமுறைகள் வழிபட்ட இந்த கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் கடும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. அப்பகுதியில் கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி சரிந்து விழுந்தது. பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

2 பார்வைகள்