Skip to content
LeeNews24×7
நேரலைதேடு

உடுமலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 வயது மாணவி உயிரிழப்பு | போலீசார் விசாரணை

உடுமலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 வயது மாணவி உயிரிழப்பு | போலீசார் விசாரணை

Maheshwaran J

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மடத்துக்குளம் அருகே உள்ள குப்பம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயவேல் – காந்திமதி தம்பதியினரின் மகள் மேகனா. இவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 7ஆம் தேதி காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், உடுமலை நேரு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.45 மணியளவில் மாணவி மேகனா உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். தகவலறிந்து வந்த உடுமலை போலீசார், மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 வயது பள்ளி மாணவியின் திடீர் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்