சென்னைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு புயலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு புயலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை இம்மாதத்தில் கூடுதலாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அக்டோபர் 1 முதல் நேற்று வரை, இயல்பிலிருந்து 57 சதவீதம் அதிகமழை பெய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக இக்காலக்கட்டத்தில், 144 மில்லி மீட்டர் மழை பதிவாகும் எனவும், ஆனால் தற்போது வரை 227 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில், இயல்பை விட கூடுதலான மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
