
உலக மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் தான் பெரும் பணக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால் உலகின் செல்வங்களில் பெரும்பாலான பகுதி இவர்களிடம் தான் குவிந்து கிடக்கிறது .
பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சாதாரண மக்களுக்கான பொருட்களை தயாரிக்க கூடிய வேளையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இப்படி பெரும் பணக்காரர்களை இலக்காக வைத்து சில பொருட்களை தயாரித்து தங்களுக்கு என ஒரு பிராண்டை உருவாக்கி தொழிலில் சாதிக்கின்றன.
பெரும் பணக்காரர்களை பொறுத்தவரை பணத்தை செலவிடுவது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை., ஆனால் அதற்கு ஏற்ற பிரீமியம் அனுபவத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அது கிடைத்துவிட்டால் நிச்சயம் அந்த பிராண்டுக்கு டிமாண்ட் வந்துவிடும். இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் எல்லாம் பணம் வைத்திருப்பவர்கள் ஆடம்பர கார்கள் , வாகனங்கள் போன்றவற்றில் மட்டுமில்லாமல் தாங்கள் அருந்தும் மதுபானங்களில் கூட தங்களின் பணக்காரத்தனத்தை காட்டுவார்கள்.
அந்த வகையில் உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ஒரு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட சில மதுபானங்களின் பட்டியலை நாம் பார்க்க போகிறோம் . இந்த மதுபானங்களின் விலை 10 லட்சம் ரூபாயில் தொடங்கி கிட்டதட்ட 25 கோடி ரூபாய் வரை நீள்கிறது. பெரும்பணக்காரர்களை இலக்காக வைத்து மட்டுமே இந்த பிராண்டுகள் மதுபானங்களை விற்பனை செய்கின்றன.
மதுபானங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை பொறுத்தும் இவற்றின் விலையும் ருசியை பொருத்தும் இவற்றுக்கான மதிப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அரியவகையான ஸ்காட்சில் தொடங்கி டக்கீலா வரை பல்வேறு வகையான மதுபானங்கள் முழுக்க முழுக்க ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்காக மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
சாமானிய மக்களுக்கு இவற்றின் விலையை கேட்டால் இந்த விலைக்கு நான் சொந்தமாக வீடு வாங்கி விடுவேன் இந்த விலைக்கு சொந்தமாக நான் கார் வாங்கி விடுவேன் என தோன்றும்.
Glenfiddich 50-Year-Old Scotch என்ற 50 ஆண்டுகால பழமையான ஸ்காட்சின் விலை 10 லட்சம் ரூபாய். 50 ஆண்டுகாலம் பழமையான ஸ்காட்ச் என்பதே இதன் விலை இத்தனை அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதற்கு காரணம். இந்த காசு இருந்தால் இந்தியாவில் நாம் சொந்தமாக கார் வாங்கி விடலாம்.
1926 Macallan Fine & Rare என்ற மதுபானம் அதன் ருசிக்கு பெயர் போனது. இதன் விலை சுமார் 54.5 லட்சம் ரூபாய். இந்த காசு இருந்தால் இந்தியாவில் சிறு நகரங்களில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகி விடலாம்.
Dalmore Scotch இந்த ஸ்காட்ச் 62 ஆண்டுகள் பழமையானது. இதன் விலை 1.42 கோடி ரூபாய். அரிய வகையிலான மதுபானம் என்பதே இதன் விலை கோடி ரூபாய்க்கும் மேல் இருக்க காரணம்.
Henri IV Dudognon Heritage Cognac இந்த மதுபானம் 100 ஆண்டுகள் பழமையானது, இதன் பாட்டில் வடிவமைப்பே பல கோடி மதிப்பு கொண்டதாம். 14.56 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே இதனை வாங்க முடியும்.
Tequila Ley 295 Diamante இதன் விலை 25.4 கோடி ரூபாய் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட மதுபானமாக இவை பார்க்கப்படுகின்றன. வைரம் பதிக்கப்பட்ட இந்த பாட்டிலேயே இதன் விலைக்கு காரணம்.