
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய நாணயங்கள் மீண்டும் சந்தைக்கு வந்தன. அப்போதுதான் சில வதந்திகளும் வெளிச்சத்திற்கு வந்தன. ரிசர்வ் வங்கி பழைய பத்து ரூபாய் நாணயங்களை ரத்து செய்துவிட்டதாக வதந்திகள் பரவின.

இந்தியாவில் முதல் பத்து ரூபாய் நாணயம் 2005-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது 2006-ல் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. இது நாட்டின் முதல் இரு உலோக நாணயம் ஆகும். ஏனென்றால், இதன் மையப் பகுதி செம்பு-நிக்கல் (copper-nickel alloy) கலவையால் ஆனது. வெளிப்புற வளையம் அலுமினியம்-வெண்கலத்தால் ஆனது. இந்த நாணயத்தின் எடை 7.71 கிராம் மற்றும் விட்டம் 27 மில்லி மீட்டர் ஆகும்.

இந்த நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, குறைந்தது 14 வடிவமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி பெரும்பாலும் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் வடிவமைப்புகள் மாறினாலும், அனைத்து நாணயங்களும் சட்டப்பூர்வமானவை தான்.ஜூலை 2011-ல், இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ரூபாய் சின்னத்தை (₹) அறிமுகப்படுத்தியது. 2011-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட பழைய நாணயங்களில் இந்தச் சின்னம் இடம்பெறாது. அதே நேரத்தில், இந்த மாற்றம் குறித்து சில வதந்திகள் பரவத் தொடங்கின. சில மக்களும் தொழிலதிபர்களும் இந்த பழைய நாணயங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தினர். இதனால் மக்களிடையே இந்த நாணயம் பற்றி குழப்பங்கள் எழும்பின.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய நாணயங்கள் மீண்டும் சந்தைக்கு வந்தன. அப்போதுதான் சில வதந்திகளும் வெளிச்சத்திற்கு வந்தன. ரிசர்வ் வங்கி பழைய பத்து ரூபாய் நாணயங்களை ரத்து செய்துவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அது முற்றிலும் தவறு.

இதுபோன்ற தவறான கருத்துகளை நீக்க ரிசர்வ் வங்கி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ரூபாய் சின்னத்துடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது. தற்போது நமது சந்தையில் நான்கு வகையான பத்து ரூபாய் நாணயங்கள் உள்ளன. அவை அனைத்தும் செல்லுபடியாகும்.

சிலர் வதந்திகளைப் பரப்புவதால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, சிலர் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். உண்மையில், நாணயம் நீண்ட காலமாக புழக்கத்தில் இருப்பதால், பழைய மற்றும் புதிய வடிவமைப்புகள் ஒரே நேரத்தில் சந்தையில் இருப்பது இயல்பான ஒன்று தான்.

இந்த பத்து ரூபாய் நாணயம் சட்டப்பூர்வமானது. எனவே, இந்த நாணயத்தை நீங்களே அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்க மறுக்காதீர்கள். தவறான வதந்திகளை நம்பாதீர்கள். ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.