
இன்றைய ( அக்டோபர் 4) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

சமீப நாட்களாகவே தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

காலையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், மாலையில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று, காலை தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,900க்கும் சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.