
தனுஷ் தனது இயக்கத்தில் வெளியான நான்காவது படம் தான் இட்லி கடை, இப்படம் அக்டோபர் 1 அன்று திரைக்கு வந்து மக்களின் ஈர்ப்பை மெல்ல மெல்ல பெற்று வருகிறது. இந்தப் படம், தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பில் உருவானது.
இப்படத்தில் தனுஷ் முருகன் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ஆர். பார்த்திபன், சமுத்திரகனி மற்றும் ராஜ்கிரண் என டாப் நடிகர்கள் பட்டாளமே முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் பல கோடி சாமானிய மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒரு இளைஞன் வெற்றியைத் தேடி நகரத்திற்குச் சென்று சாதனைகளை படைத்த பின்பு, தனது குடும்பத்தின் வேர், பாரம்பரியம் மற்றும் சொந்த ஊருக்கு திரும்பும் பயணத்தை கதைகளமாக கொண்டு உள்ளது.
தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு தமிழ் பிலிமிபீட் 5-க்கு 3 மதிப்பெண் கொடுத்துள்ளது. இப்படத்தில் 2ஆம் பாதியில் தொய்வு இருப்பதாக விமர்சனம் இருந்தாலும் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பும் பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
வசூல் விவரங்கள்
இட்லி கடை படம் 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. முதல் நாளில் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சுமார் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 2வது நாளில் 10.26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் இரண்டு நாட்களில் 21.26 கோடி ரூபாய் வரை வசூல் ஆகியுள்ளதாக sacnilk தெரிவித்துள்ளது. தமிழில் 48.34% மற்றும் தெலுங்கில் 18.33% தியேட்டர் ஆக்குபன்சி பதிவு செய்ததுள்ளது.
முதல் நாள் வசூலை ஒப்பிடுகையில் 2வது நாளில் வசூல் 6.73 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் வார இறுதி நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இட்லி கடை ஓடிடி ரிலீஸ்
இட்லி கடை படத்தின் டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 45 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இட்லி கடை பட்ஜெட்
இட்லி கடை படம் 80 முதல் 105 கோடி ரூபாய் வரையிலாந பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுல்ளது. தியேட்டர் ரிலீஸ், ஓடிடி, சேட்டிலைட் ஆகியவற்றின் மொத்த கலெக்ஷன் மூலம் இப்படம் லாபகரமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.