
திருவள்ளூர் மாவட்டம், ஈசனாம் குப்பத்தில் வசிக்கும் ஜலந்தர், 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலவிதமான செடிகளை வளர்க்கும் அனுபவம் கொண்டவர். ஆனால், இவரது தலைவிதியை மாற்றியது ‘பாலைவன ரோஜா’ எனப்படும் அடீனியம் ஒபீசம் (Adenium obesum) என்ற அற்புதமான செடிதான்.
“அது அவ்வளவு விசேஷமானது இல்லை,” “அதற்குப் பராமரிப்பு அதிகம்,” “இந்த யோசனை வேலைக்கே ஆகாது” – இப்படித்தான் பலரும் அவரைப் புறக்கணித்தார்கள். ஆனால், திருத்தணி அருகே உள்ள ஈசனாம் குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ஜலந்தர், அனைவரின் எண்ணத்தையும் மாற்றிக் காட்டினார்.

ஜலந்தர்