
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இதனையடுத்து ‘பார்க்கிங்’ பட ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் எஸ்டிஆர். இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.
சிம்புவின் படங்கள் குறித்தான தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்தாலும், அவரின் எந்த படமும் இன்னமும் முறைப்படி துவங்காமல் இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருக்கின்றனர். இதனிடையில் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ஒன்று துவங்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் வேலைகளும் துவங்கிய வேகத்திலே நின்று விட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது.
சிம்பு தனது கம்பேக்கிற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்தது கோலிவுட்டை கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரே, ‘இனிமேல் நான் என்ன பண்றேன்னு கால் மேல கால் போட்டு பாருங்க’ என கூறியிருந்தார். அதனை உறுதி செய்வதை போன்று தரமான இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து பட அறிவிப்புக்களை வெளியிட்டார். ஆனால் இதில் எந்த படங்களும் துவங்கவில்லை.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி இணைந்தது. இந்த காம்போ கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. அத்துடன் இந்த படத்துக்கான ப்ரொமோ ஷுட்டிங்கும் துவங்கி நடந்தது. சிம்புவுடன் இணைந்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இயக்குனர் வெற்றிமாறன் தனது பேட்டிகளில் இதனை உறுதி செய்தார்.
இதனால் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ விரைவிலே வெளியாகி, படமும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் சம்பந்தமான எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. சிம்புவின் சம்பள பிரச்சனை காரணமாக படம் துவங்குவது தள்ளிப்போவதாக கூறப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். இதனிடையில் சிம்பு கலைப்புலி எஸ் தாணு அல்லாமல் வேறொரு தயாரிப்பாளரை வைத்து வெற்றிமாறன் படத்தை துவங்க திட்டமிட்டார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி தாணு தயாரிப்பிலே இப்படம் துவங்க உள்ளதாம். இது சம்பந்தமாக சிம்புவை, இயக்குனர் வெற்றிமாறன் சமாதானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாடிவாசல் படத்துக்காக கலைப்புலி எஸ் தாணுவிடம் இயக்குனர் வெற்றிமாறன் அட்வான்ஸ் வாங்கிய நிலையில், வேறொரு தயாரிப்பாளரை வைத்து சிம்பு படத்தினை துவங்க அவர் விரும்பவில்லையாம். இதனாலே எஸ்டிஆரிடம் பேசி, தாணு தயாரிப்பில் படத்தை துவங்க சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக விரைவிலே வெற்றிமாறன், சிம்பு இணையும் படம் துவங்கும் என தெரிகிறது.
இந்த தகவல் எஸ்டிஆர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘வடசென்னை’ பின்னணியில், சிம்பு நடிக்கும் படத்தினை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தில் கேங்ஸ்டராக எஸ்டிஆர் நடிக்கவுள்ளார். இதற்காக தனது நீண்ட முடியெல்லாம் வெட்டி புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். இரண்டு விதமான தோற்றத்தில் சிம்பு இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
வடசென்னையில் நடித்த அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் சிம்புவின் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையில் இப்படத்துடைய அறிவிப்புக்காக மிரட்டலான அறிவிப்பு வீடியோ ஒன்றினை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் நடித்துள்ள இந்த ப்ரொமோ வெளியீட்டிற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் உள்ளனது குறிப்பிடத்தக்கது.

Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.