
கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் தொடங்கி தேசியளவில் பல தலைவர்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கி ஆதரவு கரமும் நீட்டி வருகிறார்கள். இந்நிலையில் கரூர் சம்பவத்தை ஆராய பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நேற்று இவர்கள் கரூரில் ஆய்வு செய்தனர்.
அவர் ஆய்விற்கு பிறகு கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் இயல்பானதாக தெரியவில்லை. அங்கே நடந்தது சாதாரண விஷயம் போல தெரியவில்லை. ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிகழ்வு இது. இதில் எதோ அசாதாரணமான விஷயம் நடந்து உள்ளது. உள்நோக்கம் கொண்டு சிலர் செயல்பட்டது போல தெரிகிறது. உள்நோக்கத்தோடு சிலர் பணிகளை செய்து உள்ளனர் என்று நினைக்க தோன்றுகிறது என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
பாஜக – விஜய் கூட்டணி இந்த விவகாரத்தில் விஜயின் குரலில் பாஜகவும் பேச தொடங்கி உள்ளது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.
5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
கிட்டத்தட்ட இதே குரலைத்தான் தற்போது பாஜக எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் பாஜக – விஜய் இடையே கூட்டணிக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாப் தலைகள் – பாஜக
கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே அரசியல் சாணக்கியர் ஒருவரிடம் விஜய் 3 மணி நேரம் பேசி இருந்தார். ஆளும் திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக இருப்பதால்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதற்றத்தோடு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பவே வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜெனரேட்டர் அறையை உடைத்த தொண்டர்களை கண்டிக்காமல் போனது, மீட்பு பணிகளுக்கு கூட உதவாமல் போனது என்று விஜய் மீது நிறைய தவறுகள் உள்ளன. அவருக்கு எதிராக ஆதாரங்களும் உள்ளன.
இதையடுத்தே விஜய் அரசியல் சாணக்கியரிடம் தீவிரமாக ஆலோசனை செய்து இருக்கிறாராம். 3 மணி நேரம் நடந்த ஆலோசனையில், வழக்கு என்று வந்தால் திமுகவை தடுக்க முடியாது. திமுக ஐடி விங் தவெக கதையை முடித்துவிடும். அவர்களை என்னால் எதிர்க்க முடியாது. நீங்கள்தான் உதவ வேண்டும். டெல்லி உதவியை நீங்கள்தான் பெற்று தர வேண்டும் என்று முன்பே கேட்டு இருந்தார்.
இந்த வழக்கு, ஏற்கனவே உள்ள வருமான வரித்துறை வழக்கை வைத்து இவரை பாஜக கூட்டணிக்குள் இழுக்க டெல்லியில் தீவிர திட்டமிடல் நடக்கலாம் என்கிறார்கள்.. இந்த திட்டத்தில் மூத்த தெலுங்கு நடிகர் ஒருவரும் பேச்சுவார்த்தைக்காக களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.