இந்த வாரம் அதர்வா நடித்துள்ள `இதயம் முரளி’, ஓடிடியில் சன்னி தியோல் நடித்துள்ள `Ikka’ உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
1. Series: Little House on the Prairie (English) Netflix – July 9

Little House on the Prairie
Little House புத்தகத்தின் சீரிஸ் வடிவமே `Little House on the Prairie’. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழும் ஏங்கல்ஸ் குடும்பத்தின் கதை.
2. OTT: Ikka (Hindi) Netflix – July 10

Ikka
சித்தார் பி மல்ஹோத்ரா இயக்கியுள்ள படம் `Ikka’. கொலை குற்றம்சாட்டப்பட்டவருக்காக வாதாடும் வக்கீல் அர்ஜூன் மெஹ்ராவின் கதை.
3. Post Theatrical Digital Streaming: Sing Geetham (Telugu) Netflix – July 9

Sing Geetham
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம் `Sing Geetham’. கிராமத்தினர் அனைவருக்கும் பேச்சுக்கு பதில் பாட மட்டுமே வரும் என்ற சாபம் விழ, அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே கதை.
4. Peddi (Telugu) Netflix – July 9

Peddi
ராம் சரண் நடித்த படம் `பெத்தி’. தன் ஊர் மக்களின் வாழ்க்கை மாற ஹீரோ எடுக்கும் முயற்சிகளே கதை.
5. Dose (Malayalam) Prime – July 10

Dose
அபிலாஷ் நாயர் இயக்கியுள்ள படம் `Dose’. மருத்துவமனை ஒன்றில் நடக்கும் மரணத்துக்குப் பின்னால் உள்ள மர்மங்களை விசாரிக்கும் மருத்துவரின் கதை.
6. Bulti (Malayalam) SonyLIV – July 10

Bulti
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் நடித்த படம் `Bulti’. கபடி விளையாடச் செல்லும் சில இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறுவதே கதை.
7. Pati Patni Aur Woh Do (Hindi) Netflix – July 10

Pati Patni Aur Woh Do
ஆயுஷ்மான் குரானா, சாரா அலிகான், வாமிகா கபி நடித்த படம் `Pati Patni Aur Woh Do’. கணவன் மனைவி வாழ்க்கை இடையே வரும் சிக்கல்களே கதை.
8. Theatre: i Nobody (Malayalam) – July 9

i Nobody
ப்ரித்விராஜ், பார்வதி நடித்துள்ள படம் `i Nobody’. வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட ஹெய்ஸ்ட் த்ரில்லர்.
9. Idhayam Murali (Tamil) – July 10

Idhayam Murali
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் நடித்துள்ள படம் `இதயம் முரளி’. காதலால் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் கதை.
10. Love Oh Love (Tamil) – July 10

Love Oh Love
பவிஷ், நாக துர்கா நடித்துள்ள படம் `லவ் ஓ லவ்’. காதலால் கடன்காரனாகும் ஓர் இளைஞனின் கதை.
11. Lakshmikanthan Kolai Vazhakku (Tamil) – July 10

Lakshmikanthan Kolai Vazhakku
தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள படம் `லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’. மரண தண்டனை கைதி ஒருவரைப் பற்றிய கதை.
12. Lenin (Telugu) – July 10

Lenin
அகில் நடித்துள்ள படம் `லெனின்’. கிராமத்துக் கதைக்களத்தைக் கொண்ட படம்.
13. Evil Dead Burn (English) – July 10

Evil Dead Burn
Sébastien Vanicek இயக்கியுள்ள படம் `Evil Dead Burn’. கணவரை இழந்த பெண், கணவனின் குடும்பத்துக்குள் நுழைகையில் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.
