தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் ராம் பொதினேனி. இவர் அடுத்து தனது 23வது படமான #RAPO23ல் நடிப்பதோடு அந்தப் படத்தை அவரே இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படுவதால் சாம் சிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையின் மூலம் கதைக்கு உயிர் கொடுக்கும் சாம் சி எஸ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதைக்கு இணையாக இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பேசப்படும் முக்கியமான காம்பினேஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
