காமேனியின் இறுதிச்சடங்கில் டிரம்ப், நெதன்யாகு மீது கோபத்தில் இருக்கும் ஈரான் மக்கள்.
வளைகுடாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஈரான் பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இவ்வாறு போர் தீவிரமடைந்ததால் உச்சத் தலைவரின் இறுதிச்சடங்குகள் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது .

Ali khamenei funeral
இந்நிலையில், அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4-ம் தேதி தொடங்கியது. இதில் கருப்பு நிற உடைகளில் கடலென திரண்டிருந்த மக்கள் பல்வேறு கோஷங்களை முழக்கமிட்டுக்கொண்டே காமேனியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஊர்வலம் புனித நகரமான கோம் (Qom) வழியாகச் சென்று, இறுதியாக மஷ்ஹத் (Mashhad) நகரில் ஜூலை 9 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்ற ஈரானின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பிரிவினர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிவைத்து பழிவாங்கப் போவதாக பகிரங்கமாக முழக்கமிட்டுள்ளனர். காமேனியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் முகங்களில் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்ட ராட்சத போஸ்டர்களைக் கூட்டத்தினர் ஏந்திச் சென்றனர்.

Ali Khamenei funeral
அதில் ஆங்கிலத்தில், டிரம்பைக் கொல்லுங்கள் – $100 மில்லியன் டாலர் ஈரானிய பரிசுத் தொகை” (Kill Trump – $100 Million Iranian Bounty) என்று எழுதப்பட்டிருந்ததுடன், டிரம்பின் உருவ பொம்மையைத் தூக்கிலிட்டும், அவரது போஸ்டர்கள் மீது கற்களை வீசி எறிந்தும் தங்களின் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் இனி இரத்தம் தான் பதிலடி (There will be blood), டிரம்பை கொல்லுங்கள் (kill trump), டிரம்ப் அல்லது நெதன்யாகுவை கொல்லுங்கள், 100 மில்லியன் டாலர் பரிசு (trump or netanyahu get 100 million dollar), wanted என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரானின் புனித நகரமான கோம் (Qom)-இல் டிரம்ப்-க்கு 100 மில்லியன் டாலர் வெகுமதி என்று அறிவிக்கும் ஒரு பிரம்மாண்டமான பேனர் அமைக்கப்பட்டுள்ளது.

iran
இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் கோம் (qom ) நகருக்குக் கொண்டு வரப்பட்டபோது இந்தப் பதாகை அங்கு வைக்கப்பட்ட நிலையில், அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் பதாகையை அமைத்தது யார் என்பது குறித்தோ அல்லது இது அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறதா என்பது குறித்தோ ஈரான் அதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
