ஏ. ஐ பாடல்கள், நையாண்டி வீடியோக்கள் என கரப்பான் ஜனதா கட்சியின் பகடி ஆட்டம், சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்குகிறது
எதிர்மறையாகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை, இந்தக்கால இளைஞர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு மாஸ் பிராண்டாகவே மாற்றிவிட்டனர். ஏ. ஐ பாடல்கள், நையாண்டி வீடியோக்கள் என கரப்பான் ஜனதா கட்சியின் பகடி ஆட்டம், சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்குகிறது. மூடப்பட்ட ஆலைகள், வேலைவாய்ப்பின்மை, கொத்தாகக் கசியும் வினாத்தாள்கள், சாலை மற்றும் ரயில் விபத்துகள், இடிந்து விழும் பாலங்கள் என நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு சீர்குலைவையும் தங்களின் ஏ.ஐ வீடியோக்கள் மூலம் நறுக்கெனக் கேள்வி கேட்கிறார்கள்.

வெறும் ஆன்லைன் மீம்களோடு நிறுத்தாமல், நிஜமாகவே கரப்பான்பூச்சி முகமூடி அணிந்துகொண்டு, இந்தியாவின் மிக மாசடைந்த யமுனை நதியைத் தூய்மைப்படுத்தும் சமூகச் சேவைகளிலும் இந்த இளைஞர்கள் இறங்கியுள்ளனர். பகடிக்காகத் தொடங்கப்பட்ட ‘கரப்பான் கட்சியை’, ஏ. ஐ தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவை மூலமாக ஒரு மாஸ் இயக்கமாகவே மாற்றிவிட்டனர். இதனால் தற்போது இணையத்தில் ‘கரப்பான் கட்சி’ பாடல்கள் தாறுமாறாக ட்ரெண்டாகி, இவர்களுக்கான ஆதரவு எக்கச்சக்கமாகப் பெருகி வருகிறது
