
தமிழ்நாடு பொருளாதாரம், கல்வி , தொழில் உற்பத்தி என அனைத்து பிரிவுகளிலும் நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், வாகனம், மின்சார வாகனம், தோல் சம்மந்தப்பட்ட பொருட்கள், காலணிகள், ஐபோன்கள் என பல்வேறு உற்பத்தியிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
இந்த பட்டியலில் கப்பல் கட்டுமான துறையும் சேர இருக்கிறது. மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் மசாகான் லிமிடெட் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய ஷிப் யார்டுகளை நிறுவுவதற்கு முடிவு செய்து இருக்கின்றன . கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் என்பது இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் ஷிப் பில்டிங் நிறுவனம் ஆகும். மசாகானை பொருத்தவரை இந்தியாவின் முன்னணி போர்க்கப்பல் உற்பத்தி நிறுவனமாகும்.
இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய கப்பல் கட்டுமான தளங்களை நிறுவ இருக்கின்றன . இதற்காக இந்த இரண்டு நிறுவனங்களும் கொரியாவை சேர்ந்த hd கொரியா ஷிப் பில்டிங் நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் செய்ய இருக்கின்றன . இதனை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ்நாட்டில் கப்பல் கட்டுமான தளங்களை அமைக்க இருக்கின்றன . ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இந்த கப்பல் கட்டுமான தளங்கள் அமைக்கப்படுவது மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை கப்பல் கட்டுமான பிரிவில் 2047 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி நாடாக உருவாக வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது .
ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இந்த கப்பல் கட்டுமான தளங்கள் அமைக்கப்படுவது மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை கப்பல் கட்டுமான பிரிவில் 2047 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி நாடாக உருவாக வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது .
இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனங்களுடனும் மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியாவில் அந்த நிறுவனங்கள் தங்களுடைய கப்பல் கட்டுமான மற்றும் சீரமைப்பு தளங்களை நிறுவ வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றன . இதன்படி கப்பல் கட்டுமானம் , கப்பல்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான ஒரு நாடாக இந்தியா முன்னேறும். இது இந்தியாவிற்கு மேற்கொண்டு சரக்கு கப்பல்கள் வருகை அதிகரித்து இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
உலக கப்பல் கட்டுமான சந்தையில் இந்தியாவின் பங்கு 0.06 சதவீதமாகத்தான் இருக்கிறது . தற்போது உலக அளவில் இந்தியா இந்த பிரிவில் 16வது இடத்தில் இருக்கிறது 2030க்குள் முதல் 10 இடங்களுக்கும் 2047க்குள் முதல் ஐந்து இடங்களுக்கும் வர அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்காக ஆந்திர பிரதேச மாநிலம் ,ஒடிசா, தமிழ்நாடு ,மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் மத்திய அரசு இடங்களை கண்டறிந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இந்த கப்பல் கட்டுமான தளங்கள் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது.