பொருளாதார சிக்கல்களில் தவித்து வரும் நிலையிலும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் வாங்கிய கடனை பாகிஸ்தான் திரும்பக் கொடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கிய கடனில் சுமார் 8 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை பாகிஸ்தான் ஏற்கெனவே திரும்பச் செலுத்திய நிலையில், தற்போது மீதம் இருக்கும் 16 ஆயிரம் கோடி கடனையும் திரும்ப செலுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் ஐக்கிய அமீரக அரசு பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு, அதாவது இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கியது. ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகள் மோசமடைந்தது. இதன் காரணமாக கடனை உடனே திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், கூடுதல் சலுகைகள் வழங்கப்படமாட்டாது என்றும் ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தான் அரசிடம் கூறியதாக செய்திகள் வெளியானது. அதோடு, பணத்துக்கு பதில் பாகிஸ்தானில் உள்ள வணிக இடங்களின் பங்குகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியிருந்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான், இது பாகிஸ்தானின் தன்மான பிரச்னை என்றும், ஐக்கிய அரபு அமீரகத்திடம் வாங்கிய கடனை உடனடியாக அடைக்கவுள்ளோம் என்றும் அறிவித்தது.

ஷெபாஸ் ஷெரீப்
வாங்கிய கடனில் சுமார் 8 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை பாகிஸ்தான் ஏற்கெனவே திரும்பச் செலுத்திய நிலையில், தற்போது மீதம் இருக்கும் 16 ஆயிரம் கோடி கடனையும் திரும்ப செலுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. சமீபத்தில் சவூதி அரேபியா அரசிடம் இருந்து பாகிஸ்தான் இந்திய மதிப்பில் 18 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்தது. இந்த பணத்தில் பெரும் பகுதியை கடனை அடைக்க பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், பாகிஸ்தான் ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் பரிதவித்து வரும் நிலையில், இந்தக் கடனை திரும்பச் செலுத்தியதன் மூலம் பாகிஸ்தானிடம் தற்போது சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டுமே அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி குறைவான நிதி இருக்கும் நிலையில், அந்நாட்டு இந்தத் தொகையைக் கடனை அடைக்க பயன்படுத்தியது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
