விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளில் ஏற்படப்போகும் பாதிப்புகளைச் சமாளிக்க உலக நாடுகள் இப்போதே தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றம் காரணமாக, வரும் மே மாதம் முதல் ‘எல் நினோ’ நிலைமைகள் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியா முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி அடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், வரும் மே மாதம் முதல் ‘எல் நினோ’ நிலைமைகள் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் குறிப்பிட்ட காலத்திற்குள் வெப்பநிலை அதிரிக்கும் நிகழ்வாகும். இதனால் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகளவில் வெப்பநிலை iஇயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இது ஒருசில மாதங்கள் முதல் ஓராண்டு வரை நீடிக்கலாம். ‘எல் நினோ’ என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு ’குழந்தை இயேசு’ என்று பொருள். கிறிஸ்துமஸ் காலத்தை ஒட்டி தென் அமெரிக்கக் கடற்பகுதியில் இந்த வெப்பம் உணரப்படுவதால் மீனவர்கள் இப்பெயரை வைத்தனர். எல் நினோவின் தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசியாவில் கடும் வறட்சியும், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். இந்தியாவில் வறட்சி நிலையை உருவாக்கலாம் மற்றும் கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளில் ஏற்படப்போகும் பாதிப்புகளைச் சமாளிக்க உலக நாடுகள் இப்போதே தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
