மேற்கு வங்கத்தில், காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் அதிகபட்சமாக 20.51% வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளது
மேற்கு வங்கத்தில், காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 23) 16 மாவட்டங்களில் 152 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலில், 3.6 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர். அங்கு, காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் அதிகபட்சமாக 20.51% வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளது, அதேவேளையில் மால்டா மாவட்டம் மிகக் குறைவாக 16.96% வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பார்சலிகா மதன்மோகன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 156-வது வாக்குச்சாவடி, சம்ஷேர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 212-வது வாக்குச்சாவடி, காண்டி பகுதியில் உள்ள 130-வது வாக்குச்சாவடி, பூர்வ மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியின் பிருலியா பகுதியில், கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ‘டவுன் உயர்நிலைப் பள்ளியில்’ அமைக்கப்பட்டிருந்த 229-வது வாக்குச்சாவடி, மால்டா மாவட்டத்தில் உள்ள ஹபீப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 231-வது வாக்குச்சாவடி, டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரி பகுதியில் அமைந்துள்ள ‘மார்கரெட் பள்ளியில்’ அமைக்கப்பட்டிருந்த 26/31-வது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவை சரிசெய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
