பொதுமக்களை வாக்களிக்கவிடாமல் திட்டமிட்ட சதி நடப்பதாக ஐயம் ஏற்படுகிறது என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலையில் இருந்தே பொதுமக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு சென்றவண்ணம் இருந்தனர். இவர்களுக்காக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். அதேபோல கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால், பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக தங்கள் ஊருக்குச் செல்ல முடியாத பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போக்குவரத்துத் தடைகள் மற்றும் நீண்டவரிசைகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என தவெக தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இது நிர்வாகத்தின் திட்டமிடல் குறைபாடா அல்லது திட்டமிட்ட சதியா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, பேருந்து நிலையங்களில் தவிக்கும் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தும், வாக்குப்பதிவு மிகவும் மெதுவாக நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. இது வாக்காளர்களைச் சோர்வடையச் செய்து வாக்குப்பதிவு சதவீதத்தைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு, மாலை நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்கு வந்து சேரும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதிசெய்ய வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணிவரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மட்டும் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டதாகவும், நேற்று மட்டும் சென்னையில் இருந்து 5,662 சிறப்புப் பேருந்துகள் இருந்து இயக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, பேருந்து நிலையங்களில் தவிக்கும் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தும், வாக்குப்பதிவு மிகவும் மெதுவாக நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. இது வாக்காளர்களைச் சோர்வடையச் செய்து வாக்குப்பதிவு சதவீதத்தைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு, மாலை நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்கு வந்து சேரும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மட்டும் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டதாகவும், நேற்று மட்டும் சென்னையில் இருந்து 5,662 சிறப்புப் பேருந்துகள் இருந்து இயக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
