2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
Summary
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனையில், கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டால் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் பதவி itself ஆபத்தாகும் என ஸ்டாலின் வெளிப்படையாக எச்சரித்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.
164 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் திமுக, காங்கிரஸ் (28), தேமுதிக (10), விசிக (8), இந்திய கம்யூனிஸ்ட் (5), மார்க்சிஸ்ட் (5), மதிமுக (4), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2), மனிதநேய ஜனநாயக கட்சி (1), எஸ்டிபிஐ (1), முக்குலத்தோர் புலிப்படை (1), தமிழர் தேசம் கட்சி (1) உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவாக களம்காண்கிறது.

முக ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கிய பின்னர் அதன் தலைவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொருளாளர் எல் கே சுதீஷ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களில் திமுக கூட்டணி வலுவாக இருப்பது குறித்து பேசினார். இந்தியாவிலேயே இல்லாத வகையில் நீண்டகாலம் ஒன்றாக பயணிக்கக் கூடிய கூட்டணியாக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி இருப்பதாகவும் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சியினரிடம் கலந்துரையாடிய ஸ்டாலின் அவர்களுக்கு முக்கிய வாக்குறுதி ஒன்றையும் அளித்தார். அதாவது, கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது என மாவட்டச் செயலாளர்களை எச்சரித்திருக்கிறேன். ஆகையால், எங்கேனும் சுணக்கம் இருந்தால் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை இருக்கும் என உறுதியளித்துள்ளார்.
