ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலியால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சமையல் மற்றும் வணிக எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Summary
அமெரிக்கா-ஈரான் போரின் விளைவாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, உணவகங்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படுகின்றன. மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், வணிக சிலிண்டர்கள் குறைவாக கிடைக்கின்றன.
அமெரிக்கா – ஈரான் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேரடியாக, தட்டில் இருக்கும் உணவுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அதிக நேரம் எரிபொருள் தேவைப்படும் தோசை, ஆப்பம், தந்துரி போன்ற உணவுகளைத் தயாரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தவாக்களைச் சூடாக வைத்திருக்க வேண்டியிருப்பதால், கேஸ் தட்டுப்பாடு நிலவும்போது இந்த உணவுகளைத் தயாரிப்பதை உணவகங்கள் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.

சிலிண்டர் தட்டுப்பாடு
மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், வணிக சிலிண்டர்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள உணவகங்கள் தங்கள் மெனுவைச் சுருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. மின்சார அடுப்புகளுக்கு மாற முடியாத சிறிய உணவகங்கள் கடையை மூடும் நிலைக்குச் சென்றுள்ளன. இதனால் வரும் நாட்களில் உணவுகளின் விலை உயரக்கூடும் என ஹோட்டல் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
