கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் இந்த மாதம் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பதை தென் கொரியாவின் உளவு நிறுவனம் கண்காணித்து வருகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு ஏ, அந்நாட்டின் அடுத்த அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

kim jong un with his Daughter Kim ju-ae
சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணைச் சோதனைகள் மற்றும் சீன அதிபருடனான சந்திப்பு என முக்கிய நிகழ்வுகளில் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜுஏ முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். வடகொரியாவின் பாரம்பரியமான ஆண் ஆதிக்க தலைமைத்துவத்தை மீறி, தனது குடும்பத்தின் 4ஆவது தலைமுறை ஆட்சியை உறுதிப்படுத்த கிம் ஜாங் உன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் கட்சி மாநாட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
