இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவந்த வரி தொடர்பான பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளும் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவந்த வரி தொடர்பான பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளும் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவந்த வரி தொடர்பான பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளும் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து விரிவாகப்பார்க்கலாம். ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தால் இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை, 18 சதவீதமாக அமெரிக்கா அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனம் மற்றும் நகை ஏற்றுமதித் துறை சுமார் 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சந்தையைத் தடையின்றி அணுக முடியும்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, ராணுவத் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க சொகுசு கார்கள் மீதான வரி 110 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இருப்பினும், மின்வாகனங்களுக்கும் டெஸ்லா நிறுவனத்துக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஆப்பிள், பருத்தி மற்றும் சோயா எண்ணெய் போன்ற பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பு வழங்கப்பட்டாலும், இந்திய விவசாயிகளின் நலன் கருதி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், ஏஐ தொழில்நுட்பத்துக்குத் தேவையான ஜிபியு (GPU) சிப்கள் வர்த்தகத்தை அதிகரிக்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
