
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. டிரம்ப் அறிவித்த ஹெச்1பி விசா மீதான 100000 டாலர் கட்டணம், ஏஐ தொழில்நுட்பம் மூலம் வர்த்தகத்தில் மாற்றம், பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம், அமெரிக்க அரசின் அவுட்சோர்சிங் மீதான வரி விதிப்பு ஆகியவை கடுமையாக பாதித்துள்ளது. இந்த வருடம் மோசமாக செயலாற்றி வரும் பங்குகளிஸ் ஐடி துறை பங்குகள் முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் இப்பிரச்சனைகளை சரி செய்ய புதிய மாற்றங்களை தனது வர்த்தகத்தில் செய்து வருகிறது. அதாவது ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட்டு வரும் மாற்றத்தை சமாளிக்க 12,000க்கும் அதிகமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இதேபோல் டிரம்ப்-ன் ஹெச்1பி விசா மற்றும் அவுட்சோர்சிங் வரியை சமாளிக்க அமெரிக்கைவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை குறைத்துவிட்டு பிரிட்டன் நாட்டில் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவுக்கு வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், முதலீட்டு துறை அமைச்சர் ஜேசன் ஸ்டாக்வுட் ஆகியோர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மும்பை BANYAN PARK CAMPUS-ஐ காண வந்த போது முக்கியமான அறிவிப்பு இணைந்து வெளியிடப்பட்டது.
டிசிஎஸ் நிறுவனம், பிரிட்டன் பொருளாதாரத்துடன் நீண்டகால உறவை வலுப்படுத்தும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 5,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. TCS நிறுவனம் பிரிட்டன் நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தற்போது, TCS இங்கிலாந்தில் 42,000 வேலைவாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகியுள்ளது, இந்த நிலையில் புதிதாக 5000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
TCS, 2024 நிதியாண்டில் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு 3.3 பில்லியன் பவுண்ட் அளவில் பங்களித்துள்ளது, இதோடு 780 மில்லியன் பவுண்ட் வரிகளை செலுத்தியுள்ளது. இது, சுமார் 20,400 ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சமமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TCS, லண்டனில் செயற்கை உளவியல் (AI) எக்ஸ்பீரியன்ஸ் சோன் மற்றும் டிசைன் ஸ்டூடியோவை தொடங்கியுள்ளது நேற்றைய சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வசதி, ஸ்டார்ட்அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து AI தொழில்நுட்பத்தை விரைவுபடுத்த உதவும்.
செப்டம்பரில் நியூயார்க்கில் தொடங்கப்பட்ட டிசைன் ஸ்டூடியோவுக்கு இணையாக பிரிட்டனிள் இரண்டாவது துவங்கப்பட்டு உள்ளது, இங்கிலாந்து வாடிக்கையாளர்களின் AI தொழில்நுட்பத்தில் புதிய ஐடியாக்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களுடன் இணைத்து வளர்க்கும்.