
இந்த நிலையம் சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நகரங்களுக்குச் செல்லும் சிறு வணிகர்கள், மாணவர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக, ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால், ரயிலில் பயணிக்கும் போது, அழகிய மலைகள், வயல்கள் என அனைத்தையும் நம்மால் ரசிக்க முடியும். நாட்டில், ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.

clsoed station
இந்திய ரயில்வே நெட்வொர்க் உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உள்ளது. ஆயிரக்கணக்கான ரயில்களில் நாள்தோறும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இருப்பினும், இந்த அமைப்பில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மூடப்படும் ஒரே ஒரு நிலையம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுபற்றி தற்போது இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த தனித்துவமான ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தில் உள்ள பர்தமன் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பர்தமன் நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், சிறிய பயணிகள் ரயில்களுக்கு சேவை செய்கிறது. அந்த வகையில், பான்குரா-மாசகிராம் பயணிகள் ரயில் மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் நிற்கிறது. ஆனால் அந்த ரயில்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓடாது என்பதால், அன்று ரயில் நிலையம் மூடப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக சுவாரஸ்யமானது. இந்த ரயில் நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட நிலைய மேலாளர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ரயில் டிக்கெட்டுகளை வாங்க பர்தாமன் நகரத்திற்குச் செல்ல வேண்டுமாம். மேலும், அதே நேரத்தில், நிலையத்தில் வேறு ஊழியர்கள் இல்லாததால், அந்த நாளில் டிக்கெட் கவுண்டர் முழுமையாக மூடப்படும். இதன் காரணமாக, ரயில்வே துறை அந்த நாளில் நிலையத்தை முழுமையாக மூடி வைத்திருக்கிறது.

இந்த நிலையத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதற்கு அதிகாரப்பூர்வ பெயர் இல்லை. இருப்பினும், பழங்காலத்திலிருந்தே, “ரேநகர்” என்ற பெயர் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளது. பன்குரா மற்றும் மசாகிராம் இடையே பயணிப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான நிறுத்தப் புள்ளியாகும்.

உள்ளூர்வாசிகள் கூறுவது போல், இந்த நிலையம் சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நகரங்களுக்குச் செல்லும் சிறு வணிகர்கள், மாணவர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த தனித்துவமான ரயில் நிலையம் ஒரு தனித்துவமான அடையாளமாக நிற்கிறது. நாடு முழுவதும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கொண்ட ஒரே ரயில் நிலையம் இதுதான்.