

வழக்கமான ரயில்களை விட, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சற்று வித்தியாசமானவை. வேகம், வடிவமைப்பு மற்றும் பயண வசதி ஆகியவற்றில் இது ஆடம்பர வசதியுடன் உள்ளது. நீங்கள் வந்தே பாரத் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பினால், CC (சேர் கார்) மற்றும் EC (எக்ஸிகியூட்டிவ் சேர் கார்) போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் எதைத் தேர்வு செய்வது என்பது குறித்து பயணிகள் குழம்புகிறார்கள். குறுகிய பயணத்திற்கு வழக்கமான இருக்கை தேர்வு செய்யலாமா அல்லது நீண்ட பயணத்திற்கு வசதியான இருக்கையை தேர்வு செய்யலாமா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

CC என்றால் வழக்கமான இருக்கை ஆகும். இது 3×2 இருக்கை அமைப்பில் இருக்கும். இதனால் குறைந்த இடத்தில் அதிக பயணிகளை அமர வைக்க முடியும். இது குறுகிய தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். அதேபோல், EC என்றால் பெரிய இருக்கைகள் ஆகும். இதில் அதிக இடம், சாய்வு இருக்கைகள், சுழலும் இருக்கைகளுடன் 2×2 அமைப்பில் இருக்கும். இவை நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். CC டிக்கெட் விலைகள் குறைவாக இருந்தாலும், EC டிக்கெட்டுகளின் விலை 50 முதல் 60 சதவீதம் அதிகம். காரணம், கூடுதல் வசதிகள், பிரீமியம் இருக்கைகள் மற்றும் சிறந்த உணவு போன்ற அம்சங்கள் இதில் கிடைக்கும்.

இந்த இரண்டு வகுப்புகளிலும் AC, சார்ஜிங் போர்ட்கள், இன்ஃபோடெயின்மென்ட் திரைகள் ஆகியவை உள்ளன. ஆனால் EC வகுப்புகளில் சுழலும் இருக்கைகள், சிறந்த உணவு ஆப்ஷன்கள், கேபின்கள் உள்ளன. அதேபோன்று, CCல் அதிக இருக்கைகள் உள்ளன. ஆனால், இது சற்று பரபரப்பாக இருக்கலாம். EC இல் குறைவான இருக்கைகள், அதிக தனிப்பட்ட இடம் மற்றும் அமைதியான பயணம் உள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் IRCTC வலைத்தளம், செயலி மற்றும் ரயில்வே கவுண்டர்களைப் பயன்படுத்தலாம்.

வந்தே பாரத் ரயில் பயணத்தில் முக்கிய பகுதியாக உணவு உள்ளது. CCல் தேநீர், காபி, முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், அசைவ உணவுகள் ஆகியவை அடங்கும். ECல் வரவேற்பு பானங்கள், சூடான சிற்றுண்டிகள், புதிய பழங்கள் மற்றும் பிரதான உணவுகளில் அதிக வகைகள் உள்ளன. சில பிரீமியம் வழித்தடங்களில், EC பயணிகளுக்கும் பலவகையான உணவு கிடைக்கும்.

மொத்தமாக பார்த்தால், CC என்றால் அடிப்படை வசதிகளுடன் குறைந்த செலவு மற்றும் குறுகிய தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். அதே, EC என்றால் பெரிய இருக்கைகள், அதிக இடம் மற்றும் பிரீமியம் சேவைகளுடன் செலவும் சற்று அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு நீங்கள் பயணத்தை தேர்ந்தெடுக்கலாம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணங்களை வசதியாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது என்றே சொல்லலாம்.