திருமணமோ, குழந்தைகளோ உள்ளூர நாம் அதற்குத் தயார் என தோன்றும்போதுதான் செய்ய முடியும். அது, எந்த பையோலாஜிக்கல் க்ளாக்குக்காகவோ, ஏதாவது ஓர் அழுத்தத்தினாலோ செய்யக்கூடாது.
பாலிவுட் முன்னணி நடிகை க்ரித்தி சனோன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமணத்தைத் தள்ளிப்போடுவது குறித்த முடிவில் இருக்கும்போது, எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்ற கேள்வியும் முன்வைக்கப்படும். பையோலாஜிக்கல் க்ளாக் பற்றிய சிந்தனை உங்களுக்கு இருப்பதுண்டா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த க்ரித்தி, “இதனை நான் முதன்முறையாகச் சொல்கிறேன். நான் என் கருமுட்டைகளை உறையவைத்துள்ளேன். திருமணமோ, குழந்தைகளோ உள்ளூர நாம் அதற்கு தயார் என தோன்றும் போதுதான் செய்ய முடியும். அது எந்த பையோலாஜிக்கல் க்ளாக்குக்காகவோ, ஏதாவது ஓர் அழுத்தத்தினாலோ செய்யக்கூடாது. இது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்று இல்லை என தெரியும். எனக்கு இது சாத்தியமானது, எனவே அதனைச் செய்தேன்.

Mimi
அதை மிகவும் புத்திசாலித்தனமாக ‘மீமி’ (Mimi) திரைப்படத்திற்காக நான் உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்த அந்தச் சமயத்தில்தான் இந்தச் சிகிச்சையையும் மேற்கொண்டேன். பொதுவாக, கருமுட்டை சேமிப்புச் சிகிச்சையின்போது உடலில் கடுமையான வீக்கம் ஏற்படும். எப்படியும் ‘மீமி’ படத்திற்காக நான் குண்டாகத்தான் வேண்டும் என்பதால், அந்த இரண்டு மாத ஷூட்டிங் பிரேக் இடைவெளியை இதற்குச் சரியான நேரமாகப் பயன்படுத்திக் கொண்டேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர்தான், ‘உனக்காக நீயே கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு இதுதான்’ என்று கூறி இந்த ஐடியாவைக் கொடுத்தார். அது என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.
அடுத்த படத்திற்காக எடை அதிகரிக்க வேண்டும் என்பதால், இரண்டு மாதம் இடைவெளி இருந்தது. எனக்கு அப்போது இருந்த ஒரே வேலை உடல் எடையை அதிகரிப்பதுதான். அந்தப் படமும் வாடகை தாய் பற்றியது. அந்தச் சமயத்தில் இந்தச் சிகிச்சை மேற்கொண்டதில் ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த மாதிரியான உடல் உபாதைகளைச் சந்திப்பாரோ, அதேபோன்ற ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வுதான் எனக்கும் இருந்தது.

Kriti Sanon Bollywood
இருந்தாலும், இந்த முடிவை எடுத்ததில் எனக்கு முழு மன அமைதி கிடைத்துள்ளது. என்னுடைய கேரியரில் தேவையற்ற பதற்றமும் அழுத்தமும் என் மனதிற்குள் இருக்கக் கூடாது என்று நான் விரும்பினேன். அதனால்தான் இந்த ஸ்மார்ட் பிளானிங்” எனக் கூறியிருக்கிறார்.
